மாவைக்கந்தனின் பாலஸ்தாபன பாலாலய கும்பாபிஷேக நிகழ்வு
Jaffna
Sri Lankan Peoples
Festival
Hinduism
By Sathangani
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயிலின் (Maviddapuram Kandaswamy Kovil) பாலஸ்தாபன பாலாலய கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நேற்று முன்தினம் (29) மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் வெளியிட்டுளள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 05.12.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 7.30 முதல் 9.00 வரையான சுபமுகூர்த்தத்தில் மாவைக் கந்தனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.
அடியவர்கள் யாவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து மாவைக்கந்தனின் திருவருள் பெறுய்யுமாறு மாவை ஆதீனகர்த்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று எதிர்வரும் 11.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பங்குனி உத்தர நன்நாளில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

