யாழில் இளைஞனைப் பலியெடுத்த கடுகதி!
Death
Police
Jaffna
Railway
SriLanka
Mavittapuram
By Chanakyan
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் தொடருந்து நிலைய கடவையினை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து வந்துகொண்டிருந்த போது இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிலில் மாவிட்டபுர தொடருந்து நிலையத்தைக் கடக்க முற்பட்ட போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் விறகு ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெல்லிப்பளைக் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்