சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை! இரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி
Food Shortages
Sri Lanka
Budget 2024 - sri lanka
By pavan
a year ago
சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதி செய்யப்படாத 1 கிலோ வெள்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபாயும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாயும் நிர்ணயம் செய்து கடந்த 3 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
விலைகள்
மேலும், பொதி செய்யப்படாத 1 கிலோ சிவப்பு சீனிக்கு 330 ரூபாவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனிக்கு 350 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த விலைகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி