அரசுடன் இணையமாட்டேன் - எதிரணி எம்.பி அறிவிப்பு
SJB
Ranil Wickremesinghe
By Sumithiran
தாம் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க,தெளிவுபடுத்தலொன்றை விடுத்துள்ளார்.
இதன்படி தான் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இணைவதற்கான அழைப்பிதழ் கிடைத்துள்ளதாக அவர் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்தால் நாட்டுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே தான் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரின் பெரினாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்