அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது படுத்து உறங்கிய சந்திரகாந்தன் : வைரலாகும் புகைப்படம்
மட்டக்களப்பு மாதவன மயிலத்தமடு பிரதேசத்தில் அத்துமீறிய சட்டவிரோத குடியேற்ற வாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக இன்றைய தினம்(15) அதிபருடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மகாவலி அதிகார சபை, இராணுவம், காவல்துறையினர் போன்றவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
முட்டாள்தனமான பரிந்துரைகள்
இதன்போது முக்கிய விடயங்கள் பேசப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி சந்திரகாந்தன் உறங்கிய நிலையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது .
இன்றைய முக்கிய கலந்துரையாடலின் போது மாதவனை மயிலத்தமடு பகுதியில் தற்போது இடம்பெற்று வரும் சிங்கள பேரினவாதிகளின் அராஜகம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருக்கு தெளிவுபடுத்தி இருந்தபோது இராணுவம் காவல்துறையினர் சேர்ந்து முகாம் ஒன்றை அமைத்தால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று முட்டாள்தனமான பரிந்துரைகளை சந்திரகாந்தன் தெரிவித்ததாகவும் சாணக்கியன் குற்றச்சாட்டியுள்ளார்.
அதேபோன்று மட்டக்களப்பு மாதவன மயித்தமடு பண்ணையாளர்களும் பல தடவை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பல பொய் உறுதிகளை மொழி வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது