மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம்: முட்டாள்தனமான தீர்வை கூறும் பிள்ளையான்: சாணக்கியன் சாடல்
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு விவகாரத்தில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முட்டாள்தனமான தீர்வையளிப்பதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பண்ணையாளர்கள் பொதுமக்கள் சேர்ந்து மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பை நிறுத்துமாறு கோரி 31 நாட்களாக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
சொத்து அபகரிப்பு சட்டம்
இந்தநிலையில், பல அழுத்தங்களுக்கு பிற்பாடு இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் நாங்கள் பண்ணையாளர்கள் கோரிக்கை அவர்களுடை பிரச்சனைகள் பற்றி தெரிவித்திருந்தோம். குறிப்பாக மயிலத்தமடு மாதவனைபகுதியில் சட்டவிரோதமாக குடியேறி அந்த இடத்தில் விவசாயம் செய்வோரை அகற்றுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தோம்.
அந்த இடத்தில் காவல்துறையினர் திடீரென சென்று அகற்ற முடியாது, அவர்களை அகற்ற வேண்டுமென்றால் காவல்துறையினர் பொது சொத்து அபகரிப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவின் ஊடாக அகற்றுமாறு ரணில் விக்ரமசிங்க காவல்துறையினருக்கு கூறியிருக்கிறார்.
ஆனால் இதை செய்வதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும் என நான் கேட்டபோது ஓரிரு நாட்களில் செய்து முடிக்கலாம் என அதிபர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
இந்த விடயம் தொடர்பில் சாணக்கியன் தெரிவித்த முழுமையான விடயம் காணொளியில்
