அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாவட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அதனால் தான் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்கு தொகுதியின் கிளை தொழிற்சங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இணைந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மகிந்தானந்த அளுத்கமகே,
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை மறுசீரமைக்க பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், எனவே அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் எனவும் தெரிவித்தார்.
சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த நாட்டிற்கு கிடைத்தவுடன் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த நாட்டில் தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
YOU MAY LIKE THIS
