முதலமைச்சர் பாதையில் விஜய் சந்திரசேகர்! த.வெ.க - அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை!
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை எண்ணிக்கை ஆசனங்கள் இழுப்பறியில் உள்ள நிலையில், விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைத் தொடர்ந்து, குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ளது.
இதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின.
அ.தி.மு.கவே இரண்டாம் இடம்
இந்த நிலையில், எக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைத் தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்சிஸ் மை இந்தியா கணிப்புகளின்படி, விஜயின் கட்சி 98 முதல் 120 இடங்களைப் பெற்று தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு இணையாக இருக்கும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 முதல் 32 இடங்களையும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலும் அ.தி.மு.கவே இரண்டாம் இடம் வகிக்கும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.
இதையடுத்தே, விஜய்யின் த.வெ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை அ.தி.மு.க ஆராய்ந்து வருவதாகவும், காங்கிரஸ் வெல்லும் இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே விஜய்யின் பங்கு அமையும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து இருதரப்பிலும் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, இரு கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்ததுடன், இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 29 நிமிடங்கள் முன்