யாழ். மாவட்ட நீதிபதி பி. சிவகுமார் உள்ளிட்ட மூவர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவியேற்பு
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Dharu
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் இன்று (25) பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
பிரதம நீதியரசரின் அலுவல் அறையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளான பி. சிவகுமார், ஆனந்தி கனகரத்தினம் மற்றும் லலித் கண்ணங்கரா ஆகியோர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நீதியரசர்களாக நியமனம்
குறித்த மூவரும் நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமனம் பெற்றிருந்தனர்.

இந்தப் பதவியேற்பு நிகழ்வில் நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்னா டி அல்விஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |