நாவலப்பிட்டி பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது
By Pavi
நாவலப்பிட்டி பகுதியில் இன்று (25) பிற்பகல் பெய்த கடும் மழையால் நாவலப்பிட்டி பேருந்து நிலையம் மழைநீரில் மூழ்கியுள்ளது.
பேருந்து நிலையத்தின் ஊடாக மழைநீர் வெளியேறுவதற்கான வடிகால் அமைப்பு அடைக்கப்பட்டுள்ளமையே நீர் தேங்குவதற்கு காரணம் என அங்குள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளுடன், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
போக்குவரத்துக்கும் இடையூறு
மழைநீர் தேங்கியதால் பேருந்து நிலையத்தின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

வடிகால் அமைப்பை விரைவாக சீரமைத்து, மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |