மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: பண்ணையாளர்கள் ஆதங்கம்
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் பண்ணையாளர்களுக்கு காவல்துறையும் அரச அதிகாரிகளும் தொடர் அழுத்தம் வழங்கிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பண்ணையாளர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையென்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பண்ணையாளர்கள்,
வெளியேற்றாமை வேதனையளிக்கிறது
'அத்துமீறிய பயிற்சியாளர்களை வெளியேற்றுமாறு 2022ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது. அதே கட்டளையை மீண்டும் 20.10.2026 கூறியுள்ளது.

அந்த வகையில் அந்த கட்டளை இருக்கத்தக்கவாறு மயிலத்தமடு மாதவனையிலுள்ள காவல் அரணிலுள்ள காவலர்கள் பண்ணையாளர்களுடைய பண்ணை வாடிக்குச் சென்று உடனடியாக நீங்கள் மயிலத்தமடு காவலரணுக்கு வரவேண்டும்.
நீங்கள் மாட்டை இன்னும் அகற்றவில்லை எனக் கூறி காவலர் அழைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த விடயமாக பண்ணையாளர்கள் காவல் அரணுக்கு சென்றுள்ளனர். அத்துமீறிய பயிற்சியாளர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளபோதிலும் அவர்கள் வெளியேற்றப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
அதைவிட காவலர்கள் இவர்களை அடிக்கடி அழைப்பதும் விசாரிப்பதுமாக இருக்கிறார்கள். பண்ணையாளர்களின் முறைப்பாடுகளுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. ஆனால், அத்துமீறிய பயிற்சியாளர்களின் முறைப்பாடுகளை துரிதமாக விசாரிக்கிறார்கள் காவல்துறையினர்.
காவல்துறையினரே காரணம்
இதுவொரு இனப்பாரபட்சமான செயற்பாடாக இருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு மூல காரணமாக இருப்பவர்கள் காவல்துறையினர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பதும் இங்கே புலப்படுகிறது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுமா நிறைவேற்றாதா என்பது தொடர்பில் இனிவரும் காலங்களில் தெரியும்" எனக் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |