9 நாள் முதல்வர் யார் - கூடுகிறது தமிழரசு..!
யாழ்.மாநகரசபையின் முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடை பெறவுள்ளது.
அந்தக் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த இ.ஆர்னோல்ட்டின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு அவர் பதவி விலகியுள்ளார்.
புதிய தெரிவு 10ஆம் திகதி நடைபெறும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் பதவி
அந்தக் கட்சியின் சார்பில் சொலமன் சிறிலை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மாநகரசபை உறுப்பினர்களும் கட்சி உயர் மட்டத்தில் ஒரு சிலரும் விரும்புகின்றனர்.
ஆனால், கட்சி உயர் மட்டத்திலுள்ள ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் யாரை முதல்வர் பதவிக்கு நிறுத்துவது என்று இறுதி முடிவெடுக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.
