விவசாயிகளின் வறுமையை முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் : சஜித் உறுதி
விவசாயிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வறுமையை போக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 23 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி வெல்லவாய (Wellawaya) நகரில் எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்கட்சி தலைவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பாரிய சேவை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கும் போது, “பிரபஞ்சம் மூச்சு போன்ற வேலை திட்டங்களின் ஊடாக ஒரு பில்லியன் பெறுமதியான வேலைகளை செய்திருப்பதோடு 76 வருட கால ஜனநாயக காலத்திற்குள் எதிர்க்கட்சி ஒன்று இவ்வாறான பாரிய சேவைகளை செய்யவில்லை.
இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் தாம் முன்வைக்கின்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
வறுமையான குடும்பங்கள்
அத்தோடு சமூர்த்தி, ஜனசவிய மற்றும் அஸ்வெசும போன்ற வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படும்.
வறுமையான குடும்பங்களுக்கு 20000 ரூபா விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை முற்றாக ஒழிப்போம்.
தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கும் யுகத்தை நிறைவு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |