பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படவுள்ள மாற்றம் - அடுத்த சில மாதங்களில் நடைமுறை

Bandula Gunawardane Sri Lankan Peoples
By Vanan Aug 08, 2023 07:16 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தேசிய போக்குவரத்துக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், பொதுப் போக்குவரத்து சேவையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணைகள் மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

E- ticketing முறை

[A0RYON[

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோரின் பங்குபற்றுலுடன் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (07) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பயணிகள் போக்குவரத்து துறையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் செயற்திறனின்மையால் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்துத் துறையில் உயர் தரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பயணிகள், பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் E- ticketing முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தேசிய பேருந்து சங்கங்களின் இணைவு

பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படவுள்ள மாற்றம் - அடுத்த சில மாதங்களில் நடைமுறை | Measures To Improve Public Transport Service

7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் மாகாண மட்டத்தில் கூடிய விரைவில் கருத்துக்கள் பெறப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 09 மாகாணங்கள் தொடர்பில் 09 பிரதிநிதிகளை நியமித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

போக்குவரத்து அனுமதிப்பத்திரம்

பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படவுள்ள மாற்றம் - அடுத்த சில மாதங்களில் நடைமுறை | Measures To Improve Public Transport Service

எதிர்காலத்தில் பேருந்துகளுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் GPS தொழில்நுட்பம் மற்றும் E- ticketing சேவை முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் என்றும், கொட்டாவ பேருந்து நிலையம் மற்றும் மாகும்புர பல்நோக்கு பயணிகள் போக்குவரத்து நிலையத்தை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025