காசா போர் நிறுத்தம்: கமலா ஹாரிஸை நாடியுள்ள முக்கிய மருத்துவ நிறுவனம்!
காசாவில் செயல்பட்டு வரும் முன்னனி மருத்துவ நிறுவனமான மெடி குளோபல் (MedGlobal), அமெரிக்க (USA) துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை காசாவில் உடனடி போர் நிறுத்த பேச்சவார்தையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நிலவி வரும் மோதல்நிலை மற்றும் உயிரிழப்புகளை தடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, மனிதநேய உதவி மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் எல்லைக் கடவைகளை திறத்தல். உதவிகளை அதிகரிப்பது மற்றும் சுகாதார மையங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பிற முக்கியமான நடவடிக்கைகளில் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெள்ளை மாளிகை
அந்தவகையில், கடந்த, ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) உடனான தனது சந்திப்பின் போது, அவர் பலஸ்தீனிய (Palastine) மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன், நிரந்தர போர் நிறுத்தம், அதிகரித்த உதவி மற்றும் காசாவை (Gaza) மீண்டும் கட்டியெழுப்ப உறுதியளித்தாக மெட்குளோபலின் தலைவர் ஜாஹர் சாஹ்லூல் (Zaher Sahloul) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த சந்திப்பிலிருந்து காசாவின் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், இந்த நிலையைில், மோதலை நிறுத்தவும், காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் அனுபவிக்கும் துன்பங்களை நிவர்த்தி செய்யவும் ஹாரிஸின் வாக்குறுதிகள் அனைத்தும் நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |