யாழில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்த ஆளுநரின் ஊடக செயலாளர்!
யாழ்ப்பாணத்தில் (Jaffna) செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆளுநரின் ஊடக செயலாளர் இடையூறு விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் (25) சங்கானையில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்
இதன்போது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில், ஆளுநரின் ஊடக செயலாளர் செயற்பட்டுள்ளார்.
இதனையடுத்து இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஊடகவியலாளர்கள் அந்த இடத்தில் ஆளுநரின் ஊடக செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், உடனே அவர் "நீங்கள் யார் ஊடகவியலாளர்களா ஊடக அடையாள அட்டை இருக்கிறதா எந்த ஊடகம் எனக் கேட்டு அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டார்.
தொடர்ந்தும் இடையூறு
இதன்போது, ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்த முயன்றபோது அங்கு வந்த ஆளுநரின் ஊடகப் பிரிவில் கடமை புரியும் ஒருவர் குறித்து ஊடக செயலாளருக்கு, அவர்கள் ஊடகவியலாளர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தியதுடன் சமரசப்படுத்தினார்.
மேலும், குறித்த ஊடக செயலாளர் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |