மகிந்தவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை - எடுக்கப்பட்ட உடனடி முடிவு
பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அனைத்து நிகழ்வுகளில் இருந்தும் குறுகிய காலத்திற்கு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமரின் தலைமையில் நடைபெறவிருந்த பல வைபவங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa)தலைமையில் நேற்றும் இன்றும் இடம்பெற்றன.
பிரதமர் கையொப்பமிட திட்டமிடப்பட்ட திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ பிரதமரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கொழும்பில் உள்ள நவலோக வைத்தியசாலையில் பிரதமருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் பிரதமருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ (Chamal Rajapaksa)நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.