பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறுத்த வைத்திய அதிகாரிகள் தீர்மானம்
இரண்டாம் இணைப்பு
அரச வைத்திய அதிகாரிகள் நாடு முழுவதும் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வைத்தியர்கள் நாடு முழுவதும் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.
இந்த கலந்துரையாடலின் பிரகாரம், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று(24) தீர்மானிக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ள நிலையில்,
இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.