இலங்கையில் குறைக்கப்படவுள்ள மருந்துகளின் விலை
Keheliya Rambukwella
Ministry of Health Sri Lanka
By Independent Writer
இலங்கையில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 வீதத்தால் குறைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளின் புதிய விலைகள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு மருந்து வகைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, இலங்கையில் உள்ள 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கடந்த வாரம் அனுமதியளித்திருந்தது.
இந்த நிலையில், மருந்துகளின் புதிய விலைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்