இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள மருந்து பரிசோதனை ஆய்வகங்கள்
இலங்கையில் எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிப்பதற்கான பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் (Kandy) ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சின் செயலாளர் இவ்வாறு தனது கருத்துக்களை குறிப்பிட்டார்.
மருந்து விநியோகம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சுகாதார நிலைமைகள் மதிப்பிடப்படும் பல்வேறு நேரங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் முறைப்பாடுகள் இருந்தால் மட்டுமே நாங்கள் அதைத் தொடர்கிறோம். அது போதாது.
அரசாங்கம் இப்போது இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும், இந்த சுகாதார அமைப்பு ஒரு அரச சுகாதார அமைப்பாக இருப்பதால் மற்றும் மருந்துகளின் விநியோகம் மையப்படுத்தப்பட்டிருப்பதாலும் கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளில் மருந்துகளின் கொள்முதல் செயல்முறையை விட பெரியது என்பதைக் குறிக்கின்றது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |