தமிழ் மக்கள் பொதுச் சபை பிரதிநிதிகளின் விசேட சந்திப்பு
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
By Dhilak
தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகளுக்கும் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் இன்று (05) இடம்பெற்றுள்ளது.
பிரச்சினைகள்
இந்த சந்திப்பில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாகவும் வேலை தேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவிலும் அண்மையில் தமிழ் மக்கள் பொதுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பொன்று இடம்பெற்றது.
அந்த சந்திப்பின் முடிவில், அதிபர் தேர்தலுக்கான ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக, கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

