மீட்டியாகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
மீட்டியாகொட, கிரலகஹவெல பகுதியில் நேற்று (17.11.2025) இரவு நடந்த துப்பாக்கிச் சூடு, இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான நீண்டகால மோதலின் விளைவாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கரந்தெனிய சுத்தா என்பவரின் குழுவினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்டியகொட, கிரலகஹவெல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் நேற்று (17.11.2025) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுக்காக சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்
பத்தேகம, அம்பேகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்ட மஹதுர நளின் என்பவரின் சகோதரி ஆவார்.
மஹதுர நளின் என்பவரை சூட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து பழிவாங்கும் நோக்கில் அவருடைய தரப்பினர் மூலம் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரும் , அம்பலாங்கொடை மோதரை தேவாலயக் குழுவின் தலைவர் கடந்த 4 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தக் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கரந்தெனிய சுத்தா பிரிவினர் நேற்று (17.11.2025) குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 28 நிமிடங்கள் முன்