உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் கர்தினாலை உள்ளிழுக்க திட்டமிடும் அநுர தரப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தற்கோதைய சிறிலங்கா அரசாங்கம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது திசை திருப்பு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயம் பாரதூரமானது.
[FUL8QGY ]
பிமல் ரத்நாயக்க
இவ்விருவரும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்புக்களை நடத்தியவர்கள்.
இதற்கமைய அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயத்தின் உண்மையை கத்தோலிக்க சபை வெளிப்படுத்த வேண்டும்.
இதன்படி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.
தேசிய மக்கள் சக்தி
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட பொய்களுக்கு அப்போது தான் முடிவு கிடைக்கும்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு விவகாரம் மற்றும் கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வெகுவிரைவில் குரல் எழுப்புவார்கள். அரச சேவையை வினைத்திறனாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு அச்சேவையை அரசியல்மயப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள” என்றார்.

