புகைப்படம் எடுக்க கெஞ்சினேனா...! ட்ரம்பை திட்டித் தீர்த்த இத்தாலி பிரதமர் மெலோனி
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னிடம் கெஞ்சி, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
எனினும் ட்ரம்ப்பின் இந்த பேச்சுக்கு உடனடியாக காணொளி மூலம் பதிலடி கொடுத்த பிரதமர் ஜார்ஜியா மெலோனி, டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த வாதம் முற்றிலும் பொய்யானது மற்றும் கற்பனையானது என்று மறுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது நட்பு நாட்டுத் தலைவர்களிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.
பயணத்தை அதிரடியாக இரத்து
அமெரிக்காவின் எதிரி நாட்டுத் தலைவர்களிடம் காட்டும் மென்மையான போக்கை, அவர் இத்தாலி போன்ற நீண்டகால நட்பு நாடுகளிடம் காட்டுவதில்லை என்பது வருத்தமளிப்பதாகக் கூறினார்.

மேலும், நானும் சரி, எனது நாடான இத்தாலியும் சரி, யாரிடமும் எப்போதும் கெஞ்ச மாட்டோம் என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க உறவிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அவமதிப்பான பேச்சைக் கண்டிக்கும் விதமாக, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி, தான் மேற்கொள்ளவிருந்த அமெரிக்கப் பயணத்தை அதிரடியாக இரத்து செய்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |