உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் - ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கசானில் நடைபெற்ற ரஷ்யா - ஆசியான் உச்சி மாநாட்டின் இடையே நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதலை உக்ரைன் நடத்தி உள்ளது.
மிகப்பெரிய தாக்குதல்
இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம். இந்த தாக்குதல்கள் உக்ரைன் படைகளை நிலைகுலையச் செய்யும் என தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ரஷ்ய தலைநகர் மொஸ்கோ அருகே அமைந்துள்ள கச்சா எண்ணெய் கிடங்கு மீது ஒரே நேரத்தில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.
இதில் எண்ணெய் கிடங்கு முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தாக்குதலில் மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாகவும், இதில் 17 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |