லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்...! வெளியான அறிவிப்பு
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Shalini Balachandran
2026 ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (LP Gas) விலைகளில் மாற்றங்களைச் செய்யப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
உலகச் சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வருவதோடு, நாணய மாற்று விகிதத்திலும் சவாலான நிலமைகள் காணப்பட்டபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விற்பனை விலைகள்:
- 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 4,465
- 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 1,792
- 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 835
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி