ஊடக ஆளுமை ஆனந்தி சூரியப்பிரகாசத்துக்கு இலண்டனில் நினைவேந்தல்
அனைத்துலக செய்தியாளர் ஒன்றியம் தனது அமைப்பின் தலைவரும் ஈழத்தமிழ் ஊடகப்பரப்பின் மூத்த ஒலிபரப்பாளருமான ஆனந்தி சூரியப்பிரகாசத்தின் மறைவை அடுத்து அவரை நினைவுகூரும் நிகழ்வை இன்று (மார்ச் 9 ) மாலை இலண்டனில் நடத்தவுள்ளது.
ஊடகத்துறையை சார்ந்தவர்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் அனுசரணையுடன் இடம்பெற்றும் இந்த நிகழ்வில் ஊடகர்களும் சமூக பிரபலங்களும் நேரடியாகவும் காணொளி செய்திகள் ஊடாகவும் அன்னாரது ஊடகப்பணி குறித்த நினைவுப்பகிர்வுகளை செய்யவுள்ளனர்.
ஊடகபரப்பில் பெரிதும் அறியப்பட்ட ஆனந்தி சூரியப்பிரகாசம்
பிபிசியின் தமிழோசை ஒலிபரப்பு மூலமாக உலக தமிழினத்தின் ஊடகபரப்பில் பெரிதும் அறியப்பட்ட ஆனந்தி சூரியப்பிரகாசம் கடந்த சிலமாதங்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் கடந்தவாரம் இலண்டன் மருத்துவமனையில் காலமாகியிருந்தார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கி மதிப்பளித்த ஐபிசி தமிழ்
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்ட காலம் முதல் தனது மறைவுவரை அதன் தலைமைப்பொறுப்பில் சேவையாற்றிய அன்னாருக்கு ஐபிசி தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கி மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்