கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது
இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (30.7.2024) விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு (Negombo) - கொச்சிக்கடை பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் மலேசியா - கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா (Air Asia) விமானத்தில் சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, இவரது பயணப்பொதிகளிலிருந்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான 245 இலத்திரனியல் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |