மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை கொண்டு சென்ற மௌலவி கைது
STF
Batticaloa
By Jaso
மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் மௌலவி ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மௌலவி ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு ரி.56 ரக துப்பாக்கிகள், அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள் ஒரு தொலைநோக்கி மற்றும் வாள்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலனறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி