பிரித்தானியாவில் பாடசாலை பேருந்து விபத்து
பிரித்தானியா -மெர்சிசைடு பகுதியில் பாடசாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் ஜெசிகா பேக்கர் என்ற 15 வயதுச் சிறுமி மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தானது வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பின் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
விபத்தின் போது பேருந்தில் மொத்தமாக 54 பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், விபத்து ஏற்பட்ட M53 இல் பலருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த இரண்டு சிறுவர்கள் மட்டும் Alder Hey சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் சிறிய காயங்களுடன் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு காவல்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 19 மணி நேரம் முன்