மேர்வின் சில்வாவை உடன் கைது செய்ய அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை!
அதிபர் நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
"இது சிங்கள பௌத்த நாடு. நான் வடக்கு, கிழக்கிற்கு வருவேன்.நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன்" என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறி இருப்பது பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல.
நாட்டின் சட்டத்தை மிதித்து, இனவாத, மதவாத வன்முறையை தூண்டும் வக்கிர நச்சுவார்த்தை என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு, அதிபர் நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் இவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி, அது அரச பயங்கரவாதம் மற்றும் இனவாத திணைக்களங்கள் மூலம் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதோடு, சிங்கள பௌத்த இனவாதிகளால் வடக்கு, கிழக்கின் மரபுரிமை சார் இடங்களும், சைவர்களின் வணக்க ஸ்தலங்களும் சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதோடு, தமிழர்களின் பூர்வீக இடங்களில் பௌத்த சின்னங்கள், தூபிகள், விகாரைகள் அமைப்பதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விரிவான தகவல்களை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்.
