சிறைச்சாலை மருத்துவமனையில் மேர்வின் சில்வா அனுமதி
நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா(mervyn silva), மஹர சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனை விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலை மருத்துவமனையின் ஒரு விடுதியில் மேர்வின் சில்வா மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், அவருக்கு எந்த கூடுதல் வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும், அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது
களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 05 ஆம் திகதி மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Cid) மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்