கனடாவிலிருந்து ட்ரம்பிற்கு சென்ற தகவல் : இறுதிவரை போராடப்போவதாகவும் சூளுரை

Donald Trump United States of America Justin Trudeau Canada
By Jaso Jan 13, 2025 08:59 AM GMT
Report

கனடாவின்(canada) இறையாண்மையை காக்க போராடப்போவதாகவும் கனடா ஒருபோதும் விற்பனைக்கு அல்ல எனவும் ட்ரூடோவின்(justin trudeau) முன்னாள் கூட்டணிக்கட்சித் தலைவரான ஜக்மீத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

  அமெரிக்க(us) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(donald trump), கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக தெரிவித்து வருவதுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் எனவும் விமர்சித்து வருகிறார்.

எனினும் ட்ரம்பின் விமர்சனத்திற்கு ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது சாத்தியமில்லை என தெரிவித்து பதிலடி கொடுத்திருந்தார்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

டொனால்ட் ட்ரம்புக்கு கூறும் செய்தி

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சியான New Democratic Party (NDP) கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், டொனால்ட் ட்ரம்புக்கு நான் கூறும் செய்தி ஒன்று உள்ளது, கனடா விற்பனைக்கு அல்ல, இப்போதும் அல்ல, எப்போதுமே அல்ல, என்று கூறியுள்ளார்.

கனடாவிலிருந்து ட்ரம்பிற்கு சென்ற தகவல் : இறுதிவரை போராடப்போவதாகவும் சூளுரை | Message For Donald Trump From Canada

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

சீனா நோக்கி பறக்கும் ஜனாதிபதி அநுர

சீனா நோக்கி பறக்கும் ஜனாதிபதி அநுர

விலை கொடுக்கவேண்டியிருக்கும்

கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற கடுமையாகப் போராட கனேடியர்கள் தயாராக இருக்கிறார்கள். அமெரிக்காவில் காட்டுத்தீ பற்றி எரிகிறது, அதை அணைக்க கனேடிய தீயணப்பு வீரர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள். அதுதான் கனேடியர்களாகிய நாங்கள், அதாவது, பக்கத்து நாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் உதவி செய்ய ஓடோடி வருவோம்.

ஆனால், அதற்காக எங்களுடன் சண்டைக்கு வரலாம் என ட்ரம்ப் நினைப்பாரானால், அதற்கு அவர் விலை கொடுக்கவேண்டியிருக்கும். ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீது வரி விதிப்பாரானால், பழிக்குப் பழி நடவடிக்கையாக நாங்களும் வரி விதிப்போம். அடுத்து யார் கனடாவின் பிரதமராக வந்தாலும் அதைத்தான் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் முதல் பெண்கள் சுற்றுலா ஹோட்டல் இலங்கையில் திறப்பு

தெற்காசியாவின் முதல் பெண்கள் சுற்றுலா ஹோட்டல் இலங்கையில் திறப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026