ஆர்ப்பாட்டக் காரர்களிடம் விசேட கோரிக்கை
அமைதியான அதிகார மாற்றத்திற்கு இடம் கொடுங்கள்
பிரதமரின் அலுவலகத்தை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டக் காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு, நாட்டின் தலைவர்கள் உறுதியளித்த அமைதியான அதிகார மாற்றத்திற்கு இடமளிக்குமாறும் குறித்த சங்கம் கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தை நோக்கி சென்று நகரும் மக்கள் படை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக் கோரி இன்று இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தற்பொழுது நாடாளுமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் பிரதமர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் செயலகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

