ஈழத்தமிழர்களுக்கு தொடரும் புலனாய்வு வேட்டை: விடாமல் தொடரும் சூழ்ச்சி
நடந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய பிரச்சினையை மறைக்க அதைவிட பெரிய பிரச்சினையை உருவாக்கி விட்டு சாமர்த்தியமாக காய் நகர்த்துவது என்பது அரசியல் களத்தில் சாதாரண விடயம்.
ஆனால், இதனை கைவிடாமல் எந்த மாற்றமும் இல்லாமல் காலம் காலமாக நடைமுறைப்படுத்தி வருவது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு கை வந்த கலை.
அதாவது ஒரு பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதை விட பாரிய ஒரு பிரச்சினையை கிளப்பிவிட்டு மக்களை முட்டாளக்கி தாங்கள் அந்த சிக்கலில் இருந்து தப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.
இருப்பினும், இதில் ஈழத்தமிழர்களை பொருத்தமட்டில் அரசியல்வாதிகளை தவிர புலனாய்வு பிரிவினர்தான் இந்த யுக்தியை அதிகம் கடைபிடித்து வருகின்றனர்.
ஈழத்தமிழர்களை போராட்டங்களை மழுங்கடிப்பதற்கு, மல்லிணப்படுத்துவதற்கு மற்றும் திசைமாற்றுவதற்கு இவர்கள் ஏராளமான சதிகளை செய்து வருகின்றனர்.
இது தற்போது மட்டுமன்றி காலம் காலமாய் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புலனாய்வு பிரிவினர் அன்றிலிருந்து இவ்வாறு மேற்கொண்ட சில விடயங்களின் உதாரணங்களை விரிவாக எடுத்து காட்டு காட்டுகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
