ஈரானை தாக்கினால் .. அமெரிக்காவுக்கு ரஷ்யா விடுத்த கடும் எச்சரிக்கை
United States of America
Iran
Russia
By Sumithiran
''கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலைப் போல, ஈரான் மீது தாக்குதல் நடத்த நினைத்தால், பேரழிவு ஏற்படும்'' என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அமெரிக்காவின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஈரானின் உள்நாட்டு பிரச்னைகளில் வெளிநாடு தலையிடுவது கண்டனத்திற்குரியது.
பேரழிவு ஏற்படும்
வெளிநாடுகளின் தூண்டுதலால் ஈரானில் நிலவி வரும் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, 2025ம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை போன்று மீண்டும் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இது நடந்தால், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் பேரழிவு ஏற்படும் என்று உணர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி