அதிவேக கோல் அடித்து அசத்திய மெஸ்சி -காணொளி
உலக சம்பியன் ஆர்ஜன்ரீனா - அவுஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது. இதில் அதிவேக கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆர்ஜன்ரீனா 2-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
கால்பந்து வாழ்க்கையில் அடிக்கப்பட்ட அதிவேக கோல்
🚨 MESSI GOLAZO 🚨
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) June 15, 2023
2 minutes into the game and Messi does what he does best. 💫
Stream the game for FREE on the @CBSSports app and @PlutoTV 📺 pic.twitter.com/iJdAI0Cbj9
ஆர்ஜன்ரீனா அணித்தலைவர் லயோனல் மெஸ்சி ஆட்டம் தொடங்கிய 79-வது வினாடிக்குள் சூப்பராக கோல் அடித்து அசத்தினார். அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் இது தான்.
இதற்கு முன்பு கிளப் போட்டியில் 127-வது வினாடியில் பந்தை வலைக்குள் அனுப்பியதே அவரது மின்னல்வேக கோலாக இருந்தது. மொத்தத்தில் மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.