உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் : ஆப்பிள் நிறுவனத்தை பின்தள்ளிய மைக்ரோசாப்ட்
உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனதாக்கியுள்ளது.
இதன் காரணமாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் பின் தள்ளப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்டில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும்.
இது கணினி மென்பொருள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், பெர்சனல் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது.
இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 2.888 டிரில்லியன் டாலராக 1.5 வீதத்தால் வளர்ச்சி கண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
இந்த நிலையில், கலிபோர்னியாவின் கூப்பர்டினோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மற்றொரு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், ஐ தொலைபேசிகள், ஐ பேடுகள் மற்றும் கணினிகள் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது.
இதன் சந்தை மதிப்பு 2.887 டிரில்லியனாக 0.3 வீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதையடுத்து, உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |