தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு
கிளிநொச்சியினுடைய மையப்பகுதியில் அமைந்திருக்கும் பொது பூங்காவான சந்திரன் பூங்காவில் இராணுவத்தினர் சட்டவிரோதமாக கட்டுமானப்பணிகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்ணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில்,
மக்களுக்கு சொந்தமான இந்த பூங்காவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு கரைச்சி பிரதேச சபையில் அனுமதி எடுக்க வேண்டும்.
எனினும் அதனை இராணுவத்தினர் மேற்கொள்ள முடியாது. எனவே இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைகாலமாகவே இலக்கு வைத்து பல்வேறு ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் அரசஇயந்திரம் அதன் பார்வையை செலுத்தியுள்ளதால் இதற்கெதிராக மிக தீவிரமாக செயற்படபோவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |