குறைகிறது பால்மா விலை - இன்று முதல் நடைமுறை..!
Sri Lankan Peoples
Milk Powder Price in Sri Lanka
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தொடு 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை சந்தைக்கு..

எவ்வாறாயினும், வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து புதிய விலையுடன் கூடிய பால் மா பாக்கெட்டுகள் திங்கட்கிழமை சந்தைக்கு வெளியிடப்படும் எனப் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்