நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பால் தேநீரின் விலை!
Sri Lankan Peoples
Milk Powder Price in Sri Lanka
Sri lanka tea
By Dhilak
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 5 ரூபாயினால் இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரித்துள்ளமையை தொடர்ந்து விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய விலைகள்
அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும் போது, 400 கிராம் பால் மா பைக்கற்று ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மா பைக்கற்றின் விலை 125 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி