யாழில் வெளிநாட்டு மோகம் காட்டி பெருந்தொகை பணம் மோசடி: தொடரும் விசாரணை
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்த நபருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை - மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.
அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்ததுடன் 10 இலட்சம் ரூபா இன்னமும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் தலைமறைவு
அதன்படி, பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஜனாதிபதி தேர்தலில் அநுரவை ஆதரித்த ரணிலும் அதற்காக அவர் கொடுக்கும் விலையும் 16 நிமிடங்கள் முன்

ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும்
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி