மன்னார் தீவு பகுதிக்குள் கணியமணல் அகழ்வு : தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள வழக்கு
மன்னார் தீவு பகுதிக்குள் கணியமணல் அகழ்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும் அப்பகுதிக்குள் கனியமணல் அகழ்வு தொடர்பான அனுமதி வழங்கக் கூடாது தொடர்பில் தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் தற்போதைக்கு இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பதாலும், இதற்கான போதிய ஆதாரங்களும் அனுமதிகளும் வழங்காத நிலை இருப்பதாலும் இந்த வழக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கணியமணல் அகழ்வு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் இந்த வழக்கை தொடர முடியும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு பதிவு
எருக்கலம்பிட்டி சந்தியில் இருக்கும் அலுவலகம் மற்றும் ஏனைய இடங்களில் ஏதாவது செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பான முறைப்பாடுகளை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் உங்களுடைய சமூகம் சார்ந்து பதிவு செய்யுமாறும் மன்னார் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் ஆதாரங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த செயற்பாடுகள் நீதிமன்ற முறைகளை அல்லது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் மிகவும் கடினமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |