தனியார் ஊழியர்களுக்கு வெளியான நற்செய்தி! குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தச் சட்டத்தின்படி, தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை ஜனவரி 1, 2026 முதல் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தனியார் துறை ஊழியரின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 27,000 இலிருந்து ரூ. 30,000 ஆக அதிகரிக்கும் என தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், குறைந்தபட்ச தினசரி ஊதியமும் ரூ. 1,080 இலிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதலாளிகளே பொறுப்பு
இந்நிலையில், இடைத்தரகர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தொடர்பாகவும் இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பின்படி, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் அறக்கட்டளை நிதி, கூடுதல் நேரம், பணிக்கொடை, மகப்பேறு ஊதியம் மற்றும் விடுமுறை ஊதியம் போன்ற அனைத்து சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் முதலாளிகளே பொறுப்பாவார்கள் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு முதலாளியும் முறையாக பணம் செலுத்தவில்லை என்றால், அது தொடர்பான முறைப்பாடுகளை தொழிலாளர் திணைக்களத்தின் முறைப்பாடு மேலாண்மை அமைப்பில் cms.labourdept.gov.lk வழியாகவோ அல்லது அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகவோ சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |