தமிழரசுக்கட்சியை கொச்சைப்படுத்திய கடற்றொழில் அமைச்சர்: பொங்கியெழுந்த அர்ச்சுனா
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு சாராயத்திற்காக வாக்களித்தார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வெளியிட்ட கருத்து குறித்து யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) விசனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கடற்றொழில் அமைச்சர் தமிழ் மக்களை தேசிய உணர்வு இல்லாதவர்கள் என்று இழிவுபடுத்தியதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (20.05.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அர்ச்சுனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சி
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக்கட்சி என்பது வடக்கு மாகாணத்தினுடைய தமிழ் மக்களினுடைய இதயம்.
எங்களுடைய தேசியத் தலைவர் உருவாக்கிய கட்சி ஒன்றை காசு, கசிப்பு, சாராயங்களுக்காக வாக்கிடுகின்றார்கள் என்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் சொன்னது இவ்வாறு இருக்கின்றது.
எங்களுடைய தமிழ் மக்கள் தேசிய உணர்வு இல்லாதவர்கள், எங்களுடைய தமிழ் மக்கள் தேசிய தலைவரின் பின்னால் பயணிக்காதவர்கள், எங்களுடைய தமிழ் மக்கள் சாராயத்திற்காக வாக்கிடுபவர்கள் என்று தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கின்றது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
