இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (27.12.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.
தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள்
மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும்.
அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது.
மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை.
இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |