இந்தியாவிலிருந்து சிறிலங்கா திரும்பினார் பசில்!
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இன்று மதியம் நாடு திரும்பியுள்ளார்.
அவர் புது டெல்லியில் இருந்து இன்று மதியம் 1.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
நிதியமைச்சருடன் அவரது பாரியார், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இந்தியாவுக்கு சென்றிருந்தனர்.
நிதியமைச்சரின் இந்திய பயணத்தின் போது, இந்திய அரசாங்கத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர் கடனுதவியை பெறுவதற்கான இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதுடன் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்