யாழ். காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது: அமைச்சர் திட்டவட்டம்
யாழ் (Jaffna) காங்கேசன்துறை முகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
இந்தியா (India) ஒதுக்கிய பணம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (18) போக்குவரத்து துறைமுகங்கள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொருத்தமான காரணி
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (S. Shritharan) எழுப்பிய துறைமுக அபிவிருத்தி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறை மூலமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம்.
ஏனெனில் வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான காரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலிவில் துறைமுகங்கள் போன்று காங்கேசன் துறை முகத்தை மாற்ற எமது அரசாங்கம் விரும்பவில்லை.
பல தடவைகள்
அதுமட்டுமல்லாது காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய நிதி போதாது” என தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிவஞானம் சிறிதரன், இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்று தருகிறோம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
பதில் வழங்கிய அமைச்சர், “இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் பேசி உள்ளார் நாங்களும் பேசியுள்ளோம் ஆனால் வணிகத் துறைமுகமாக அதை மாற்றுவதற்கு முடியாது” என தெரிவித்துள்ளார்.
இதன்போது கேள்வி எழுப்பிய சிவஞானம் சிறிதரன், நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்யாமல் பொருத்தமில்லை என தெரிவிக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார்.
காணி விடுவிப்பு
பதில் வழங்கிய அமைச்சர், ஆய்வறிக்கை இருக்கின்றது நாடாமன்றத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என பதில் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை எப்போது விடுவிப்பீர்கள் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு ஏன் நட்ட வீடு வழங்கவில்லை என சிவஞானம் சிறிதரன் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பதில் வழங்கிய அமைச்சர், “மக்களின் காணிகள் மக்களுக்கு என்பது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
யாழ்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக கைப்பற்றிய காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கூற முடியாது பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியே பதில் வழங்க முடியும்” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
