யாழில் சிறீதரன் எம்.பிக்கு கோபத்தில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க
சிறீதரன் அவர்களே, எனக்கு உங்களைவிட சத்தமாக பேச தெரியும், நான் சொல்வதை கேட்கவும், நீங்கள் பிரபலமாவதற்கு நான் முன்னரும் சந்தர்ப்பம் கொடுத்தேன் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (18) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே பிமல் ரத்நாயக்க இவ்வாறு கோபத்துடனும் கேலியும் கிண்டலுமாக பதிலளித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், ”நாங்கள் காணி விடுவிப்பு மற்றும் காணி பிரச்சினைகளை அரசியல் இலாபத்திற்காக செய்யவில்லை. விடுவித்த காணிகளுக்கு நாங்கள் பெரும் விழாக்கள் எடுக்கவில்லை.
திறக்கப்பட்ட வீதி
முப்பது வருடங்களாக மூடிப்பட்டிருந்த வயாவிளான் வீதியை திறந்தோம் விழா எடுத்தோமா?அரசியல்வாதிகள் யாரும் வந்தார்களா? இராணுவத்தால் பிரதேச செயலாளருக்கே அதன் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதில் இருக்கும் அரசியல் நோக்கமும் பார்வையும் நாங்கள் அறிவோம். இந்த காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாகும் அதற்கான தேவைப்பாடு இன்று இல்லை என்றால் அக்காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவற்றுக்கு விழா அவசியமில்லை.
நாங்கள் சொல்லாவிட்டாலும் சிலர், தங்களால் தான் காணிகள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். வடக்கு மக்கள் எங்களுக்கே அதிகம் வாக்களித்துள்ளனர்.
கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள்
உங்களை விட எமக்கே இந்த மக்கள் தொடர்பில் அதிகமான பொறுப்புள்ளது. ஆதலால் நாம் அதற்காக வேலை செய்கிறோம். உங்களுக்கு தெரியுமா? பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான சாதாரண படிமுறை ஒன்றுள்ளது. அதை பின்பற்றுங்கள் .
அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நாற்பது வருடங்களாக தங்கள் காணிகளில் ஒரு பனை மரத்தை நாட்டுவதற்காக காத்திருக்கின்றனர்.
வடக்கில் 25 வருடங்களுக்கு பின்னர் நாம் அபிவிருத்திகளை செய்கிறோம். காணிகளை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எமகில்லை. உங்கள் அனைவரின் ஆலோசனைகளை பெற்றே செயற்திட்டங்களை செயற்படுத்த உள்ளோம்.
நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்ய முடியாது. சில நடைமுறைகள் இருப்பதால் அதைப் பின்னபற்றியே செயற்பட வேண்டியுள்ளது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
