தமிழர் தலைநகரில் காவல்துறையின் அட்டூழியம்: அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு படம்!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Tamils
Trincomalee
By Shalini Balachandran
திருக்கோணமலையில் (Trincomalee) தியாக தீபம் திலீபனின் நினைவுப் படம் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம்பெற்று வந்தது.
நினைவேந்தல் நிகழ்வு
இதற்காக தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டது.
இதையடுத்து, திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
நினைவுபடம்
இந்நிலையில் இன்றைய தினம் (19) திருக்கோணமலை பிரதான காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளால் குறித்த நினைவுபடம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
